Home இந்தியா தினகரனுக்கு சுயேட்சை சின்னம் தான் ஒதுக்கப்படும்: தேர்தல் ஆணையம்

தினகரனுக்கு சுயேட்சை சின்னம் தான் ஒதுக்கப்படும்: தேர்தல் ஆணையம்

840
0
SHARE
Ad

tamil-nadu-state-election-commissionபுதுடெல்லி – ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரன் சுயேட்சை வேட்பாளர் என்பதால், அதன் அடிப்படையில் அவருக்கு சுயேட்சை சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இரட்டை இலை விவகாரத்தில் மேல்முறையீடு செய்திருக்கும் தினகரன், தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தனக்கு தொப்பி சின்னம் வழங்க வேண்டும் என்றும், அதனை இன்றே அறிவிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்தார்.

அதற்குப் பதிலளித்திருக்கும் தேர்தல் ஆணையம், தினகரனுக்கு சுயேட்சை சின்னம் மட்டுமே ஒதுக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது.