வாஷிங்டன் – அமெரிக்காவின் கோஸ்டா ரிக்கா தீவில் கடந்த வியாழக்கிழமை, 18 பேர் கொண்ட குழு ஒன்று ‘ஸ்கூபா டைவிங்’ என்று சொல்லக்கூடிய ‘ஆழ்கடல் நீச்சல்’ பயிற்சி மேற்கொண்டது.
அதில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண்ணான ரோஹினா பந்தாரியும் இருந்தார். அவர் பிரபல தொழிலதிபரான வில்பர் ரோசின் டபில்யூஎல்.ரோஸ் & கோ நிறுவனத்தில், மூத்த இயக்குநராகச் செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், ஆழ்கடலில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ரோஹினாவை சுறா ஒன்று தாக்கத் தொடங்கியது. அப்போது உடனிருந்த அவரது 26 வயதான பயிற்சியாளர் சுறாவிடமிருந்து ரோஹினாவை மீட்க எவ்வளவோ போராடினார்.
ஆனால் அந்த சுறா ரோஹினாவின் இரு கால்களையும் கடித்துத் துண்டாக்கியது. மேலும், பயிற்சியாளரையும் கடுமையாகக் காயப்படுத்தியது.
இந்நிலையில், இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
என்றாலும் ரோஹினா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அமெரிக்காவில் இச்சம்பவம் ஸ்கூபா டைவிங் ரசிகர்கள் மத்தியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.