கோலாலம்பூர் – கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, தேசிய தினத்தன்று மலேசியாவில் அமைதியைக் கெடுக்க சதிச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் அபு சயாப் இயக்கத்தைச் சேர்ந்த 8 பேரை, செராசில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் அபு சயாப் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை பிலிப்பைன்ஸ் நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியது.
இது குறித்து பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் வெளியுறவு விவகாரத் தலைவர் கோலோனெல் எட்கார்ட் அரேவாலோ ஊடகங்களிடம் வெளியிட்டிருக்கும் தகவலில், கைது செய்யப்பட்டிருப்பவர்களில் ஃபுருஜி இண்டாமா என்பவன் பாசிலான் பகுதியைச் சேர்ந்த அபு சயாப் கும்பலுக்குத் தலைவன் என்றும், இரண்டாவதாக ஆப்ரகாம் எபோங் என்பவனும் அபு சயாப்பைச் சேர்ந்தவன் தான் என்றும் தெரிவித்திருக்கிறார்.
எனினும், ஆப்ரகாமுக்கும், அபு சயாப்புக்குமான தொடர்புகள் ஆராயப்படுகின்றன என்பதையும் எட்கார்ட் குறிப்பிட்டிருக்கிறார்.