Home நாடு “கேவியஸ் பாகோ தொகுதியில் போட்டியிடலாம்” – டாக்டர் சுப்ரா

“கேவியஸ் பாகோ தொகுதியில் போட்டியிடலாம்” – டாக்டர் சுப்ரா

948
0
SHARE
Ad

subra-dr-perak agm-03092017ஈப்போ – மஇகாவின் தொகுதியான கேமரன் மலையில்தான் போட்டியிடுவேன் எனத் திரும்பத் திரும்பக் கூறிவரும் மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ், அதைவிடப் பாதுகாப்பான ஜோகூர் பாகோ தொகுதியில் போட்டியிட முன்வர வேண்டும் என டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

“சுயேச்சையாகிவிட்ட தொகுதி என்ற காரணத்தால் கேமரன் மலையில் நான் போட்டியிடுவேன் என கேவியஸ் கூறி வருகிறார். அந்த அடிப்படையில் பார்த்தால், அம்னோவின் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் எதிர்க்கட்சிக்குப் போய்விட்டதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பாகோ தொகுதியும், தற்போது சுயேச்சையான தொகுதியாகும். கேமரன் மலையை விடப் பாதுகாப்பான பாகோ தொகுதியை அம்னோவிடம் இருந்து கேட்டுப் பெற்று கேவியஸ் அங்கு போட்டியிட வேண்டும்” என்றும் டாக்டர் சுப்ரா ஞாயிற்றுக்கிழமை (3 ஆகஸ்ட் 2017) நடைபெற்ற மஇகா பேராக் மாநில பேராளர் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றியபோது கூறினார்.

2004-ஆம் ஆண்டு முதல் மஇகா போட்டியிட்டு வென்று வந்துள்ள கேமரன் மலைத் தொகுதியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என மீண்டும் வலியுறுத்திய அவர், எனினும், தேசிய முன்னணி தலைமைத்துவத்தின் இறுதி முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்றும் கூறினார்.