லண்டன் – இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் – கேத் மிடில்டன் தம்பதி தங்களது மூன்றாவது குழந்தையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டு, ஜூலை 22-ம் தேதி, இந்த ஜோடிக்கு முதல் குழந்தை பிறந்தது. அதற்கு ஜார்ஜ் எனப் பெயரிட்டனர்.
அடுத்ததாக, கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் சார்லோ என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது இத்தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறக்கவிருக்கிறது.
இத்தகவலை கென்சிங்டன் அரண்மனையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.