Home உலகம் எலிசபெத் ராணியாரின் இறுதிச் சடங்குகள் சுமுகமாக நடந்தேறின

எலிசபெத் ராணியாரின் இறுதிச் சடங்குகள் சுமுகமாக நடந்தேறின

518
0
SHARE
Ad

இலண்டன் : கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி காலமான இரண்டாம் எலிசபெத் ராணியாரின் இறுதிச் சடங்குகள் இன்று இலண்டனில் சுமுகமாக நடைபெற்று முடிந்தன.

அவரின் நல்லுடல், இலண்டன் சாலைகளில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. வரலாறு காணாத  அளவுக்கு பல உலகத் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ராணியாரின் இறுதி ஊர்வலத்தை சோகத்துடன் பார்த்துக் கொண்டு சாலையின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

#TamilSchoolmychoice

எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்ஸ் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே எலிசபெத்தும் நல்லடக்கம் செய்யப்பட்டார்.