Home நாடு மகாதீர் எச்சரிக்கை : பருவமழையின் போது பொதுத் தேர்தல் பெரும் ஆபத்து!

மகாதீர் எச்சரிக்கை : பருவமழையின் போது பொதுத் தேர்தல் பெரும் ஆபத்து!

415
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பருவமழை காலகட்டத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது பெரும் அபாயங்களை மக்களுக்கு ஏற்படுத்தும் என துன் மகாதீர் எச்சரித்துள்ளார்.

1999-ஆம் ஆண்டில் மகாதீர் பிரதமராக இருந்தபோது பொதுத் தேர்தலை நவம்பர் மாதத்தில் நடத்தினார். அந்த முடிவு அடிக்கடி மற்றவர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. இதுகுறித்துக் கருத்துரைத்த மகாதீர் அப்போது பருவநிலை மாற்றம் (Climate Change) என்ற பிரச்சனை இல்லை, ஆனால் இப்போது அத்தகைய பருவநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, பருவமழை பெய்யும் காலகட்டத்தில் பொதுத் தேர்தலை நடத்தினால் அதனால் பெரும் அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு எனவும் மகாதீர் எச்சரித்தார்.

#TamilSchoolmychoice