Home இந்தியா சஷி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டி

சஷி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டி

604
0
SHARE
Ad

புதுடில்லி : கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சஷி தரூர் (படம்) அடுத்த காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சஷி தரூர் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒப்புதல் அளித்துவிட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரசில் வாரிசு அரசியல் பின்பற்றப்படுகிறது என பாஜக கடுமையானச் சாடல்களைத் தொடர்ந்து வரும் வேளையில், மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க, எவ்வளவோ வற்புறுத்தப்பட்டும் ராகுல் காந்தி மறுத்து விட்டார்.

#TamilSchoolmychoice

தற்போது கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரைக்குமான ஒற்றுமை நடைப் பயணத்தை ராகுல் மேற்கொண்டிருக்கிறார்.