Home உலகம் பிலிப்பைன்ஸ் ஆசியாவின் 2-வது பெரிய சூதாட்ட நாடாக மாறுகிறது

பிலிப்பைன்ஸ் ஆசியாவின் 2-வது பெரிய சூதாட்ட நாடாக மாறுகிறது

311
0
SHARE
Ad

மணிலா : ஆசிய நாடுகளில் மிகப் பெரிய சூதாட்ட வட்டாரமாகத் திகழ்வது சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் மாக்காவ் தீவு. அதை அடுத்து 2-வது பெரிய சூதாட்ட மையங்களைக் கொண்ட நாடாக இருப்பது சிங்கப்பூர்.

தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளில் சூதாட்ட மையங்கள் திறக்கப்படுவதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஆசியாவிலேயே மிகப் பெரிய சூதாட்ட மைய நாடாக பிலிப்பைன்ஸ் உருவாகி வருகிறது.

கூடுதலாக மேலும் பல சூதாட்ட மையங்கள் திறக்கப்படுவதால் இந்த ஆண்டில் 6.1 பில்லியன் டாலர் வருமானத்தை பிலிப்பைன்ஸ் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019-இல் கோவிட்டுக்கு முன்பாக 8.26 மில்லியனாக இருந்த சுற்றுப் பயணிகள் வருகை, 2023-இல் 5.45 மில்லியனாக மட்டுமே இருந்தது.