Home இந்தியா விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தல்- வெற்றி யாருக்கு?

விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தல்- வெற்றி யாருக்கு?

130
0
SHARE
Ad
விஜயதாரணி

சென்னை : இந்த முறை இந்தியப் பொதுத் தேர்தலுடன் சேர்த்து நாடு முழுவதும் காலியாக இருக்கும் 26 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தமிழ் நாட்டில் காங்கிரசின் விஜயதாரணி ராஜினாமா செய்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி, தமிழ் நாட்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்படும்.

விஜயதாரணி அண்மையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக பதவி விலகி பாஜகவில் இணைந்தார். விளவங்கோடு தொகுதியிலேயே அவர் மீண்டும் பாஜக சார்பில் போட்டியிடுவாரா? அல்லது கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற ஆரூடங்களுக்கு இன்னும் விடை தெரியவில்லை.

#TamilSchoolmychoice

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. ஆனால், காங்கிரஸ் அந்தத் தொகுதியில் மீண்டும் வெல்லக் கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறதா? அதிமுக அங்கு போட்டியிட்டு தனது செல்வாக்கைக் காட்ட முற்படுமா? அல்லது பாஜகவும் தன் கூட்டணியின் சார்பாக வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குமா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விளவங்கோடு இடைத் தேர்தல் விடை தரும்.