கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற தேசிய வழக்கறிஞர் மன்றத்திற்கான ஆண்டு பொதுக்கூட்டத்தில் நஜிப்புக்கு அண்மையில் அரச மன்னிப்பின் மூலம் வழங்கப்பட்ட தண்டனை குறைப்பிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வழக்கு மாமன்னரின் அதிகாரத்தை விமர்சிக்கும் நோக்கம் கொண்டது அல்ல! மாறாக நஜிப்புக்கு வழங்கப்பட்ட தண்டனைக் குறைப்பு சட்ட நடைமுறைகளின்படி நடைபெற்றதா இல்லையா என்பதை நிர்ணயிப்பதற்கான வழக்கு என மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எசிரா அப்துல் வஹாப் தெரிவித்தார்.
நஜிப் தண்டனை குறைப்பு மீதான வழக்கு தொடர்பான தீர்மானம், பெரும்பான்மை அடிப்படையில் வழக்கறிஞர் மன்றத்தின் 78 வது ஆண்டுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் நஜிப்பின் தண்டனைக் குறைப்பு மீதான முடிவு குறித்து அதிருப்தி கொண்டதால் வழக்கறிஞர் மன்றம் வழக்கு தொடுக்கும் முடிவை எடுத்ததாக எசிரா மேலும் தெரிவித்தார்.