Home Featured இந்தியா இங்கிலாந்துடன் நெருங்கிய நட்புடைய நாடு இந்தியா – தெரேசா மே கருத்து!

இங்கிலாந்துடன் நெருங்கிய நட்புடைய நாடு இந்தியா – தெரேசா மே கருத்து!

1160
0
SHARE
Ad

Britain EUபுதுடெல்லி – கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தின் புதிய பிரதமாகப் பொறுப்பேற்ற தெரேசா மே, இந்தியாவிற்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி விமான நிலையத்தை அடைந்த அவருக்கு, இந்திய அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது.

இன்று திங்கட்கிழமை டெல்லியில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்தியப் பயணம் குறித்து தெரேசா மே விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், “இங்கிலாந்துடன் நட்புறவான நாடுகளில் மிக முக்கியமான நாடு இந்தியா. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக செயலாற்றி வருகின்றார். இந்தியாவுடன் மேலும் நமது நட்புறவை வளர்த்துக் கொள்ள இது சரியான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.