Home One Line P2 திரைத்துறையைச் சேர்ந்த ஐவர் இம்முறை புதிதாகப் போட்டி

திரைத்துறையைச் சேர்ந்த ஐவர் இம்முறை புதிதாகப் போட்டி

705
0
SHARE
Ad

சென்னை: ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 5 திரைப்பட பிரபலங்கள் போட்டியிடுகிறார்கள்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த திங்கட்கிழமை (மார்ச் 15) அன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய குஷ்பு, பின்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு அங்கிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.

#TamilSchoolmychoice

திமுக இளைஞரணி தலைவரான நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடுவதால் திமுகவில் வாரிசு அரசியல் பரவலாக இருக்கிறது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நடிகை ஸ்ரீப்ரியா தனது நண்பர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பிரதிநிதித்துப் போட்டியிடுகிறார். கமல்ஹாசன் கட்சியைத் துவங்கியதும் ஸ்ரீப்ரியா அரசியலுக்கு வந்துவிட்டார். இவர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாடலாசிரியரும், நடிகருமான சினேகனும் மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டதும் கட்சியில் இணைந்தார். கட்சியின் முக்கிய உறுப்பினரான சினேகன், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.