Home One Line P2 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

651
0
SHARE
Ad

சென்னை: ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த மார்ச் 12- ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் (இந்திய நேரம்) நிறைவடைந்தது.

தேர்தல் ஆணையம் சற்றுமுன் வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 4,567 பேர் தங்கள் வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் 3,818 பேர் ஆண்கள், 747 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

#TamilSchoolmychoice

வேட்புமனு பரிசீலனை நாளை நடைபெறவுள்ளது.