இதில் 867 பேர் உள்நாட்டினர். மேலும், 698 பேர் வெளிநாட்டினர் ஆவர். 11 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 330,042 ஆக அதிகரித்துள்ளன.
இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,360ஆகும்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 151 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 57 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இன்றைய ஒரு நாளில் 2 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,225- ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் சரவாக்கில் பதிவாகி உள்ளன. சுமார் 407 சம்பவங்கள் அங்கு பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 348 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.