Home One Line P1 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அச்சுறுத்தப்படவில்லை

பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அச்சுறுத்தப்படவில்லை

645
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  தேசிய கூட்டணியை ஆதரிப்பதற்காக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் சலுகைகள் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுப்பினர் சுரைடா கமாருடின் விவரித்தார்.

பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணத்தை அன்வார் மறுப்பதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.

“குற்றச்சாட்டு ஒரு நிர்பந்தத்தில் செய்யப்பட்டதாக எனக்கு தோன்றுகிறது. மேலும், (அன்வார்) தனது பாதையை இழந்துவிட்டார், ஏனென்றால் இன்னும் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், அது உண்மை இல்லை” என்று சுரைடா கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 பாதிப்பைக் கையாள்வதில் தேசிய கூட்டாணி வெற்றி பெற்றது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு தர காரணமாக அமைந்தது என்று அவர் தெரிவித்தார்.