Home One Line P2 ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணும் அனைத்துலக – உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகள்

ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணும் அனைத்துலக – உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகள்

1134
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் ஊக்கமூட்டும் பேச்சு நிகழ்ச்சி, அதிரடி-நிறைந்த அறிவியல்-புனைக்கதை த்ரில்லர் தொடர் மற்றும் குடும்ப நாடகத் தொடர் ஆகிய உயர்தர உள்ளூர் மற்றும் அனைத்துலக தமிழ் நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வியாபாரத் துணைத் தலைவர் மார்க் லூர்ட்ஸ் (படம்) கூறுகையில், “எங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பலதரப்பட்டச் சிறப்பான, உயர்தர உள்ளூர் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விருது வென்ற மற்றும் திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினரைத் தாங்கி மலரும் இம்முதல் ஒளிப்பரப்பு நிகழ்ச்சிகளை அனைத்து வயது வாடிக்கையாளர்களும் கண்டு மகிழ்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் தங்களுக்கு விருப்பமானத் தமிழ் நிகழ்ச்சிகளை குடும்பத்தினருடன் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழவும் எங்களின் வாடிக்கையாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்றார்.

உள்ளூர் நிகழ்ச்சிகளின் முன்னணியில், அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் பின்வருபவற்றை எதிர்ப்பார்க்கலாம்:

#TamilSchoolmychoice

• மார்ச் 19, ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்புக் காணும் பெண்கள் ரோக் எனும் பேச்சு நிகழ்ச்சியை விருது வென்ற உள்ளூர் இயக்குநர் டி.எஸ். டாக்டர் விமலா பெருமாள் இயக்கியுள்ளார். டேனேஸ் குமார் தயாரித்துள்ளார். புகழ் பெற்ற உள்ளூர் நாடகத் தொடர் ‘தமிழ்லெட்சுமி’ பின்னணியில் பணியாற்றிய பிரபல ஜோடி இவர்களாவர். தேசியப் பூப்பந்து வீராங்கனை, பாடகி, வழக்கறிஞர், நடிகை, ஆர்வலர், வானொலி அறிவிப்பாளர் மற்றும் பலரை உள்ளடக்கியப் பல்வேறு திறமையான மலேசியப் பெண்களின் ஊக்கமளிக்கும் கதைகளைத் தாங்கி மலர்கின்றது, பெண்கள் ரோக். டத்தின் ஸ்ரீ மணிமாலா, டத்தோ சுசீலா மேனன், டத்தின் ஸ்ரீ ஷைலா நாயர், சங்கீதா கிருஷ்ணசாமி, ஜாக்லின் விக்டர் மற்றும் பலர் இப்பேச்சு நிகழ்ச்சியின் விருந்தினர்களாவர். தங்களின் வெற்றியை அடைய பேருதவியாக இருந்த விவரங்களைப் பற்றி இவ்விருந்தினர்கள் பகிர்ந்துக் கொள்வர்.


• புகழ்பெற்றத் திரைப்படத் இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கிய அறிவியல் புனைக்கதை அதிரடித் தொடரான மென்டே ஏப்ரல் 1-ஆம் தேதி ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது. இந்த அற்புதமான 22 அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரை டத்தின் ஸ்ரீ ஷைலா நாயர் தயாரித்ததோடு சி.குமரேசனுடன் இணைந்து முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பிரபலமான உள்ளூர் கலைஞர்களான இர்பான் ஜய்னி, யாஸ்மின் நதியா, சரவணன், கமீஷா, முரளி மற்றும் தேவ்யானா ஹசான் ஆகியோர் இத்தொடரில் நடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, சக்ரவர்த்தி தொகுப்பு (பேக்) வாடிக்கையாளர்கள் மார்ச் 23-ஆம் தேதி முதல் ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 235)-இல் முதல் ஒளிபரப்புக் காணும் புதுப்புது அர்த்தங்கள் எனும் குடும்ப நாடகத் தொடரைக் கண்டு இரசிக்கலாம். நீண்ட காலமாக ஒளியேறிய ‘கோலங்கள்’ மெகா தமிழ் தொடரில் நடித்த பிரபலமான விருது வென்ற நடிகை, தேவயானி மற்றும் அபிஷேக் சங்கர் ஜோடியை ஒரு தசாப்தத்திற்கு மேலாகியும் மீண்டும் ஒன்றிணைத்தத் தொடர், புதுப்புது அர்த்தங்கள்.

நிகழ்ச்சிகளின் மேல் விவரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.