Home One Line P1 ‘அம்னோ தலைமை, பெர்லிஸ் அம்னோவை வெளியேற்றலாம்’- ஷாஹிடான்

‘அம்னோ தலைமை, பெர்லிஸ் அம்னோவை வெளியேற்றலாம்’- ஷாஹிடான்

620
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பெர்சாத்துவுடனான உறவுகளை அம்னோ துண்டித்துவிடும் என்ற உச்சமன்றக் குழுவின் முடிவிற்கு எதிராக பெர்லிஸ் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் ஷாஹிடான் காசிம் சவால் விடுத்துள்ளார்.

பிரதமர் மொகிதின் யாசினால் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பிரிமா தலைவராக நியமிக்கப்பட்ட ஷாஹிடான், அம்னோ பெர்லிஸ் தேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறினார்.

“பெர்லிஸ் ஒரு முடிவை எடுத்துள்ளதால், அவர்கள் பெர்லிஸை நீக்க விரும்புகிறார்கள், அதை செய்யலாம். எங்களைப் பொறுத்தவரை, தேசிய முன்னணி , தேசிய கூட்டணி பேச்சுவார்த்தையின் வழி, இரு கட்சிகளும் தேர்தலின் போது மோதக்கூடாத சூழல் வேண்டும், ” என்ற் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சமீபத்தில் மலேசிய வீட்டுக் கழகத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்ட ஷாஹிடான், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியின் சமீபத்திய அறிக்கை குறித்து கருத்து தெரிவித்தபோது இதனைத் தெரிவித்தார்.

மார்ச் 27- ஆம் தேதி நடைபெறவுள்ள அம்னோ பொதுக் கூட்டத்தில் இந்த முடிவு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தற்போதைய நிலைமைக்கு ஏற்ப அம்னோ மாற வேண்டியது அவசியம் என்று அராவ் நாடாளுமன்ற உறுப்பினரான ஷாஹிடான் கூறினார்.

“ஒரு காலத்தில், அம்னோ அசைக்க முடியாத ஒரு கட்சி. எனவே அம்னோ மக்களிடையே, இது மிகச் சிறந்தது என்று மக்கள் கூறினார்கள். அதை அசைக்க முடியாது. 90 களில் அம்னோ பெயரில் போட்டியிட்டால் நாம் வெல்வோம். இப்போது காலம் மாறிவிட்டது, “என்று அவர் கூறினார்.