Home One Line P1 தேசிய கூட்டணியுடன் இருந்தால் அம்னோ 89 தொகுதிகளில் வெல்லும்

தேசிய கூட்டணியுடன் இருந்தால் அம்னோ 89 தொகுதிகளில் வெல்லும்

507
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ 89 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்று கெதெரே நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

இது தற்போது தேசிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டால் மட்டுமே சாத்தியம் என்று அவர் கூறினார்.

தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளருமான அவர் கூறுகையில், கட்சி தக்க வைத்துக் கொள்ள விரும்பும் 55 இடங்களிலிருந்தும், மேலும் 23 இடங்களிலிருந்தும் இந்த தொகை பெறப்பட்டுள்ளது என்று கூறினார். அங்கு விழுக்காடு வாக்குகள் மட்டுமே வெல்ல வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த தேர்தல்களில் மூன்று முனை போட்டியில் தோல்வியடைந்த 11 தொகுதிகளும் இதில் உள்ளன. இந்த 11 தொகுதிகளை அம்னோ தனது நட்பு கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்ட முடிந்தால் எளிதாக வெல்லும் என்று அனுவார் நம்பிக்கை கொண்டுள்ளார்.

“அம்னோ பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் மற்றும் சிறந்த சூத்திரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று அவர் தமது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

பலர் தங்கள் சொந்த இலாபத்திற்காக இயங்குவதால் அம்னோவின் வெற்றியைப் பார்க்க முடியாது என்று அவர் கூறினார்.

கட்சி, ஒரு வெற்றிகரமான சூத்திரத்தைக் கொண்டு வந்து சிலரை புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அனுவார் அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ, பாஸ் மற்றும் பெர்சாத்து இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவர்களது கூட்டணி 149 தொகுதிகளை வெல்ல முடியும் என்று அவர் கூறுகிறார். மூன்று மலாய் கட்சிகளிடையே ஒத்துழைப்பு மூன்று முனை போட்டிகளையும் தடுக்கும் என்று அவர் கூறினார்.