Home One Line P1 மியான்மார்: இராணுவம் சு கியை விடுவித்து, வன்முறையை கைவிட வேண்டும்

மியான்மார்: இராணுவம் சு கியை விடுவித்து, வன்முறையை கைவிட வேண்டும்

508
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இராணுவ சதித்திட்டத்தைத் தொடர்ந்து மலேசியா மியான்மாரில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி குறித்து கவலை தெரிவித்ததோடு, பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்தது.

ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட நாட்டின் அரசியல் தலைவர்களை விடுவிக்க மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.

பிரதமர் மொகிதின் யாசின் ஓர் அறிக்கையில் இது குறித்து குரல் கொடுத்தார்.

#TamilSchoolmychoice

“அமைதியான போராட்டங்களில் நிச துப்பாக்கி குண்டுகளைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த மோசமான நிலைமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மியான்மாரில் உள்ள இராணுவத் தலைமை போக்கை மாற்றி, அமைதியான தீர்வை நோக்கிய பாதையைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயங்கரவாதம் வன்முறையை அதிகரிக்கும் மற்றும் நாட்டின் எதிர்காலம் மீளமுடியாத அழிவை எதிர்கொள்ளக்கூடும், என்று மொகிதின் கூறினார்.

கடந்த பிப்ரவரியில், மியான்மார் இராணுவம் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) தலைமையிலான அரசாங்கத்தை அகற்றியது. மேலும், கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் மோசடி குற்றச்சாட்டில் அதன் பல தலைவர்களை தடுத்து வைத்தது.

இந்த நடவடிக்கை இன்றுவரை பாரிய எதிர்ப்புக்களைத் தூண்டியுள்ளது. இதுவரை, குறைந்தது 233 பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

நெருக்கடியை சமாதானமாக தீர்க்க மலேசியா மீண்டும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துவதாக மொகிதின் கூறினார்.

“இந்த விஷயத்தில், பிப்ரவரி 1 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மற்றும் யு வின் மைன்ட் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உடனடியாகவும் நிபந்தனையுமின்றி விடுவிக்க நான் அழைப்பு விடுக்கின்றேன்,” என்று பிரதமர் கூறினார்.