Home One Line P2 வேட்புமனு பரிசீலனை தொடங்குகிறது- மார்ச் 22 வரை வேட்புமனுவை திரும்பப்பெறலாம்

வேட்புமனு பரிசீலனை தொடங்குகிறது- மார்ச் 22 வரை வேட்புமனுவை திரும்பப்பெறலாம்

532
0
SHARE
Ad

சென்னை: ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 12 தொடங்கி மார்ச் 19 வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆகக் கடைசியாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 4,567 பேர் தங்கள் வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளனர்.

அவர்களில் 3,818 பேர் ஆண்கள், 747 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, வேட்புமனு பரிசீலனை இன்று சனிக்கிழமை (மார்ச் 20) நடைபெறவுள்ளது. மார்ச் 22-ஆம் தேதி வரை மனுக்களை திரும்பப்பெறலாம்.