Home One Line P2 அமெரிக்க- சீன அதிகாரிகளிடையே கடுமையான வாக்குவாதம்

அமெரிக்க- சீன அதிகாரிகளிடையே கடுமையான வாக்குவாதம்

687
0
SHARE
Ad

அலாஸ்கா: அலாஸ்காவில் நடைபெற்று வரும் பைடன் நிர்வாகத்திற்கும், சீனாவிற்கும் இடையிலான முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தையில், அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகளிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

சீனாவைத் தாக்க பிற நாடுகளை அமெரிக்கா தூண்டுவதாக சீன அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதே நேரத்தில் சீனா தனக்கு சாதகமாக நடப்பதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று அமெரிக்கா கூறியது.

இரண்டு வல்லரசுகளுக்கிடையிலான உறவுகள் பல ஆண்டுகளாகவே சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

ஜின்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்களை பெய்ஜிங் நடத்துவது போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை எழுப்ப அமெரிக்கா உறுதியளித்தது.

ஏங்கரேஜில் நடந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் ஈடுபட்டனர். சீனாவின் மூத்த வெளியுறவுக் கொள்கை அதிகாரி யாங் ஜீச்சி மற்றும் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோரை எதிர்கொண்டனர்.

எவ்வாறாயினும், இரகசியமாக நடந்த இந்த பேச்சுவார்த்தைகள் இரண்டு மணிநேரங்களுக்கு மேல் நடைபெற்றதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த ஜூன் முதல் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான முதல் உயர்மட்ட சந்திப்பு இதுவாகும்.