Home உலகம் சீனாவின் பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது

சீனாவின் பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது

753
0
SHARE
Ad

வாஷிங்டன் : ஒரு சாதாரண வானில் பறக்கும் பலூன் உலகின் இருபெரும் வல்லரசுகளுக்கிடையில் பெரும் மோதலை உருவாக்கக் கூடுமா? அதுதான் நடந்திருக்கிறது.

அமெரிக்க வான்வெளியில் சீனாவின் பலூன் ஒன்று பறந்துவர, அதைப் பார்த்து அமெரிக்கா, அதற்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் சுட்டு வீழ்த்தத் தயங்கியிருக்கிறது.

உளவு பார்க்கும் பலூன் அது என்றும் அமெரிக்கா கூறியது. அந்த பலூன் எங்களுடையதுதான் என ஒப்புக் கொண்டது சீனா. கடந்த சில நாட்களாக நீடித்த இந்த சர்ச்சையைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5) அந்த பலூனைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறது அமெரிக்கா.

#TamilSchoolmychoice

சுடப்பட்ட அந்த பலூனின் சிதறிய பாகங்களைத் தற்போது தேடி வருவதாகவும் அமெரிக்க இராணுவம் அறிவித்தது.

ஒரு வாரத்துக்கு முன்பாக அந்த பலூன் அலாஸ்கா மாநிலம் வழியாக அமெரிக்க வான்வெளியில் நுழைந்தது. சவுத் கரோலினா மாநிலத்தின் கடற்கரையோரத்தில் அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

பலூனை சுட்டு வீழ்த்தியது வரம்பு மீறிய செயல் என சீனா கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சீனாவின் உள்நாட்டு பலூனை சுட்டு வீழ்த்த இத்தனை நாட்கள் தயங்கியது குறித்து ஜோ பைடன் தலைமைத்துவம் பலவீனமானது என குடியரசுக் கட்சியினர் சாடி வருகின்றனர்.