Home உலகம் துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் 2,300 பேர் மரணம்

துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் 2,300 பேர் மரணம்

676
0
SHARE
Ad

அங்காரா : துருக்கியின் தென்பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் மோசமான சேதங்கள் ஏற்பட்டதோடு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,300-க்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இதுவரையில் மலேசியர்கள் யாரும் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

#TamilSchoolmychoice

துருக்கி நிலநிடுக்கத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக மலேசியாவின் ஸ்மார்ட் என்னும் சிறப்பு மீட்புப் படையினர் துருக்கி சென்றுள்ளனர்.

ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் கொண்ட கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளாலும் பலர் பாதிக்கப்பட்டனர்.