Home உலகம் துருக்கி-சிரியா நிலநடுக்க மரண எண்ணிக்கை 3,700 ஆக உயர்வு

துருக்கி-சிரியா நிலநடுக்க மரண எண்ணிக்கை 3,700 ஆக உயர்வு

722
0
SHARE
Ad

அங்காரா : துருக்கியின் தென்பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் மோசமான சேதங்கள் ஏற்பட்டதோடு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,700-க்கும் மேல் உயர்ந்திருக்கிறது.

மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நூற்றுகணக்கானோர் இன்னும் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பல கட்டடங்கள் சேதமுற்று சரிந்து விழுந்திருக்கின்றன. உலக நாடுகள் உதவிகளை அளித்து வருகின்றன. துருக்கியும் நேட்டோ நாடுகளுக்கும் அண்டை நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் உதவி புரிய வேண்டுகோள் விடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

இதுவரையில் மலேசியர்கள் யாரும் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

துருக்கி நிலநிடுக்கத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக மலேசியாவின் ஸ்மார்ட் என்னும் சிறப்பு மீட்புப் படையினர் துருக்கி சென்றுள்ளனர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பாதிக்கப்பட்ட துருக்கிய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அன்வார் தெரிவித்துக் கொண்டார்.

ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் கொண்ட கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளாலும் பலர் பாதிக்கப்பட்டனர்.