Home நாடு அன்வாருடன் விக்னேஸ்வரன், சரவணன் சந்திப்பு

அன்வாருடன் விக்னேஸ்வரன், சரவணன் சந்திப்பு

1328
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : தேசிய முன்னணியுடன் இணைந்து பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்திருந்தாலும் இதுவரையில் மஇகா தலைவர்கள் அரசியல் ரீதியாக பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்ததில்லை.

இந்நிலையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் இணைந்து அன்வார் இப்ராகிமை இன்று அவரின் அலுவலகத்தில் சந்தித்தனர். தங்களின் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்திய சமுதாயம் தொடர்பான பல்வேறு விஷயங்களை பிரதமருடன் தாங்கள் கலந்தாலோசித்ததாக சரவணன் தன் முகநூலில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

இந்திய சமூகத்தின் நலன்கள் குறித்து கவனிப்பதாக அன்வார் இப்ராகிம் தங்களிடம் உறுதியளித்தார் என சரவணன் தெரிவித்தார்.

இந்திய சமூகம் மேம்பாடடையவும்  முன்னேறவும் உதவுவதாகவும் அன்வார் வாக்குறுதி அளித்தார் எனவும் சரவணன் தன் பதிவில் தெரிவித்தார்.