Home இந்தியா அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி

814
0
SHARE
Ad

சென்னை : கடும் போராட்டங்களுக்குப் பின்னர் எடப்பாடி அணியினர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றியிருக்கின்றனர்.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு தற்போது உச்ச நீதிமன்றத்து வழக்காக மாறியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த பாஜகவின் தமிழ் நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி தனித்தனியாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரையும் சந்தித்தார்.

அதன் பிறகு, பிற்பகலில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, வழக்கின் தீர்ப்பு வெளியிடப்படும்வரை, அதிமுக பொதுக்குழுதான் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வேட்பாளரைத் தேர்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சுற்றறிக்கைத் தீர்மானம் மூலம் அதிமுக வேட்பாளராக தென்னரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து தென்னரசு தன் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.