Home நாடு அன்வார் இப்ராகிம் தைப்பூசத் திருவிழாவுக்கு ஏன் வரவில்லை? தெரியுமா?

அன்வார் இப்ராகிம் தைப்பூசத் திருவிழாவுக்கு ஏன் வரவில்லை? தெரியுமா?

697
0
SHARE
Ad

கோலாலம்பூர் : டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமரான பின்னர் நடைபெறும் முதல் தைப்பூசம் என்பதால் அவர் இந்த முறை பத்துமலைக்கு வருகை தருவார் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

அதற்கேற்ப, ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவும் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனுடன் நேரில் சென்று அன்வார் இப்ராகிமுக்கு பத்துமலை தைப்பூசத்திற்கு நேரில் வர அழைப்பு விடுத்தார்.

ஆனால், அனைவரும் எதிர்பார்த்தபடி அன்வார் தைப்பூசத்திற்கு வரவில்லை. மாறாக, அவர் உடல் நலக் குறைவுக்காக தேசிய இருதய மருத்துவனைக்குச் சென்று முழு பரிசோதனை செய்து கொண்டதாக அவரே தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

அந்தப் பரிசோதனைகளின் முடிவில் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், முழு உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர் என்றும் அவர் பதிவிட்டார்.

எனினும், இந்துப் பெருமக்களுக்கு தைப்பூச வாழ்த்துக்களை அன்வார் முகநூலில் தெரிவித்தார்.

அதன் பின்னர் தன் அலுவலகத்தில் தன் மகள் மற்றும் உதவியாளர்களுடன் பணி செய்யும் புகைப்படத்தையும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.