Home உலகம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரப் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரப் காலமானார்

1476
0
SHARE
Ad

துபாய்: பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் துபாய் நகரில் காலமானார்.

தேசத்துரோக வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட அவர் துபாயில் சிகிச்சை பெற்று வந்தார். 79 வயதான அவரின் மரணத்தை பாகிஸ்தானிய இராணுவம் அறிவித்தது.

பாகிஸ்தான் தலைவர்களும், உலகத் தலைவர்களும் முஷாரப்பின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

2014-ஆம் ஆண்டில் முஷாரப் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 76 வயதான முன்னாள் பாகிஸ்தான் இராணுவத் தலைவருமான அவர் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 2016-இல் துபாய் சென்றுவிட்டார். பாதுகாப்பு, சுகாதார காரணங்களை சுட்டிக்காட்டி, முஷாரப் நாடு திரும்பாமல் துபாயிலேயே தங்கியிருந்தார்.