Home இந்தியா நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய உரை! இருநாட்டு இராணுவங்கள் பேச்சுவார்த்தை!

நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய உரை! இருநாட்டு இராணுவங்கள் பேச்சுவார்த்தை!

60
0
SHARE
Ad

புதுடில்லி: இந்தியா-பாகிஸ்தான் இருநாட்டு இராணுவங்களின் முக்கிய அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவர் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதே வேளையில் இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி, வானொலி வழி முக்கிய உரையொன்றை நிகழ்த்தவிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்தம் ஏன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் அறிவிக்கப்பட்டது? இந்திய அரசாங்கம் அறிவிக்காதது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி வருகின்றன. மோடி தன் உரையில் இதுபோன்ற பல விவகாரங்களுக்கு விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியக் கடற்படை ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் அடுத்த கட்டமாக பாகிஸ்தானின் கராச்சி நகரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது திடீரென போர்நிறுத்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். போர் நிறுத்தத்திற்குப் பின்னரும் பாகிஸ்தான் சில இடங்களில் தாக்குதல்கள் நடத்தின என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.