புதுடில்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்தம் அமெரிக்காவின் ஆதரவுடன் அமுலுக்கு வந்த அடுத்த சில மணிநேரத்தில் பாகிஸ்தான் அதனை அத்துமீறியதாகவும் ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகள் மீது வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப், இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 10) தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாகத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் முப்படைத் தளபதிகளும், பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர். அப்போது அவருக்கு முப்படைத் தளபதிகளும் தங்களின் விளக்கங்களை அளித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் இந்தியாவின் ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகளில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் இதனால் பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.