Home One Line P1 அம்னோ-பிகேஆர் மோதிக் கொள்ளாமல் இருக்க பேச்சுவார்த்தை!- வட்டாரம்

அம்னோ-பிகேஆர் மோதிக் கொள்ளாமல் இருக்க பேச்சுவார்த்தை!- வட்டாரம்

689
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆருக்கும், அம்னோவிற்கும் இடையே இதுவரை நடைபெற்ற முறைசாரா பேச்சுக்கள் குறித்து அதிகம் தெரியவில்லை என்றாலும், பிகேஆரின் வட்டாரம் ஒன்று பேச்சுவார்த்தைகள் ஒரு விஷயத்தை நோக்கமாகக் கொண்டவை என்று தெரிவித்ததாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, இரு கட்சிகளும் தற்போது பெர்சாத்து பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கான புரிந்துணர்வைத் தேடுவதாகக் கூறப்படுகிறது.

“நிச்சயமாக, மோதல்கள் ஏற்படாத வகையில் (பெர்சாத்து தொகுதியில்) ஒரு வழியைக் கண்டறிவதற்காக இது செய்யப்பட்டது,” என்று பிகேஆர் வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியது.

#TamilSchoolmychoice

கட்சியின் மற்ற இரண்டு வட்டாரங்களும் இதேபோன்ற கருத்தை தெரிவித்தன.

தற்போது, ​​31 பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் 25 பேர் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இதில் 15 பேர் அம்னோவைப் பிரதிநிதித்தவர்கள். மற்ற பத்து பேர் பிகேஆர்  வேட்பாளர்கள் ஆவர்.

14- வது பொதுத் தேர்தலில் தங்கள் தொகுதிகளில் பிகேஆர் சின்னத்தில் வென்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது தேசிய கூட்டணியை ஆதரிக்கும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளனர்.

பெர்சாத்து தொகுதியில் அம்னோவும் பிகேஆரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதைத் தவிர்க்க முடிந்தால், அவர்கள் மீண்டும் அத்தொகுதியை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.