கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 46-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் புருணை சுல்தான் ஹாசானால் போல்கியா, தொடர்ந்து பல கூட்டங்களில் கலந்து கொண்டதால் அயர்ச்சி காரணமாக தேசிய இருதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் தேசிய இருதய மருத்துவமனையில் (ஐஜேஎன்) ஓய்வு பெற்று வருகிறார் என்றும் அன்வார் மேலும் தெரிவித்தார்.
மே 26 முதல் சுல்தான் ஹாசனால் போல்கியா கோலாலம்பூருக்கு வருகை தந்து ஆசியான் தொடர்பான சந்திப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டு வந்தார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் தலைவர்களுக்கு ஆசியான் தலைவர் என்ற முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (மே 27) பிரம்மாண்டமான விருந்துபசரிப்பு ஒன்றையும் அன்வார் நடத்துகிறார்.