Home இந்தியா திருவள்ளூர் ரயில் விபத்து – உயிரிழப்பில்லை – மருத்துவமனைக்கு விரைந்த உதயநிதி!

திருவள்ளூர் ரயில் விபத்து – உயிரிழப்பில்லை – மருத்துவமனைக்கு விரைந்த உதயநிதி!

241
0
SHARE
Ad

சென்னை :தமிழ் நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கவரப்பேட்டை என்ற இடத்தில் பாக்மதி விரைவு ரயில் சரக்கு ரயில் ஒன்றுடன் நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) மோதியதில் பலர் காயமடைந்தனர். எனினும் யாரும் மரணமடையவில்லை. இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சம்பவத்தை அறிந்த தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து விபத்தில் காயமடைந்த பயணிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

“திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே பாக்மதி விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தை அறிந்து அதிர்ச்சியுற்றோம். இந்த விபத்தையடுத்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் முழு வீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் விபத்தில் காயமுற்று, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் விபத்து & அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளைச் நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். காயமுற்றுள்ள பயணிகளுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதன் விவரம் குறித்து, மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்தோம். சிகிச்சையில் உள்ளோருக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளையும் உடனுக்குடன் அளிக்க ஆலோசனைகளை வழங்கினோம்.
மேலும், விபத்து நடந்த இடத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விவரம், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான மாற்று ஏற்பாடு, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் போன்றவை குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டறிந்தோம். சிகிச்சையில் உள்ள அனைவரும் விரைந்து நலம்பெற விழைகிறேன்” என உதயநிதி தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.