Home இந்தியா உதயநிதிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து

உதயநிதிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து

503
0
SHARE
Ad

சென்னை : திமுக கூட்டணியில் இணைவார் – நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் – என ஆரூடங்கள் பரவிவரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.

“தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து காட்டியவர் அன்புத் தம்பி @Udhaystalin. தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றி வரும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” கமல் தன் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டார்.