Home உலகம் எம்எச் 370 : காணாமல் போன 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் வழக்கு தொடங்குகிறது

எம்எச் 370 : காணாமல் போன 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் வழக்கு தொடங்குகிறது

510
0
SHARE
Ad

பெய்ஜிங் : 10 ஆண்டுகளுக்கு முன்னர் 8 மார்ச் 2014-ஆம் நாள் மர்மமான முறையில் காணாமல் போன எம்எச் 370 விமானத்தில் இருந்த 239 பயணிகளில் பெரும்பாலோர் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அந்தப் பயணிகளின் உறவினர்கள் சீனாவில் மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.

அந்த வழக்கின் விசாரணை இன்று திங்கட்கிழமை (நவம்பர் 27) தொடங்கியது.

#TamilSchoolmychoice

பயணிகளில் 153 பேர் சீனாவைச் சேர்ந்தவர்களாவர். உலகில் இதுவரை மர்மம் கண்டுபிடிக்கப்பட முடியாத ஒரு விவகாரமாக எம்எச் 370 விமான விவகாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

10 ஆண்டுகள் கடந்தும் காணாமல் போன பயணிகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லாத நிலையில் அந்த விமானத்தைத் தேடும் புதிய முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும் என பயணிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.