Home நாடு பெர்சாத்து புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வாருக்கு ஆதரவு

பெர்சாத்து புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வாருக்கு ஆதரவு

442
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் பெர்சாத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) பெர்சாத்து கட்சியின் புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் அபு ஹூசேன் ஹாபிஸ் சைட் அப்துல் ஃபாசால் அன்வாருக்கான தனது ஆதரவைப் பகிரங்கப்படுத்தினார்.

1982 முதல் அன்வார் நாட்டை ஒற்றுமைப்படுத்துவதில் வெளிப்படுத்தி வரும் கடப்பாட்டைத் தான் கண்டுள்ளதாகவும் சைட் அபு ஹூசேன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அன்வாருக்கு ஆதரவு தெரிவிக்கும் 5-வது பெர்சாத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.

இதுவரையில் நாடாளுமன்றத்தின் 152 உறுப்பினர்களின் ஆதரவை அன்வார் பெற்றுள்ளார். எனினும் இவை வெறும் அறிவிப்புகளினால் ஏற்பட்டிருக்கும் எண்ணிக்கைதான். நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஏதாவது ஒரு மசோதா, அல்லது தீர்மானத்திற்கு அன்வாருக்கு ஆதரவாக வாக்களித்தால்தான் அவர்களின் நிலைப்பாடு தெரியவரும். அந்த சமயத்தில் கட்சித் தாவல் சட்டம் இந்த பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது பாயுமா என்பது தெரியவரும்.

முன்னாள் பிரதமர்கள் முஹிடின் யாசினும், இஸ்மாயில் சாப்ரியும் அன்வாருக்கு உதவ வேண்டும் என்றும் சைட் அபு ஹூசேன் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

இதுவரையில் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்கண்டார் சுல்கர்னைன் அப்துல் காலிட், லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைலி அப்துல் ரஹ்மான், குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அசிசி அபு நைம், ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் சஹாரி கெச்சிக் ஆகிய 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இப்போது 5-வதாக சைட் அபு ஹூசேன் இணைந்துள்ளார்.