Home நாடு சைட் சாதிக் சைக்கிள் விபத்து – காயங்களுடன் தப்பினார்!

சைட் சாதிக் சைக்கிள் விபத்து – காயங்களுடன் தப்பினார்!

157
0
SHARE
Ad
சைட் சாதிக் அப்துல் ரஹ்மான்

லங்காவி : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 12) சைக்கிள் விபத்தொன்றில் சிக்கினார். லங்காவியில் நடைபெற்ற ‘அயர்ன்மேன்’ (Ironman Malaysia Championship) என்ற போட்டியில் பங்கு பெற்ற அவர் சைக்கிள் ஓட்டிச் செல்லும்போது சாலையில் விழுந்து கிடந்த ஒரு மரக் கிளையில் மோதியதால் காயங்கள் அடைந்தார்.

இருந்தாலும், தளராமல் தொடர்ந்து மழைக்கிடையிலும் போட்டியில் பங்கு கொண்டார்.

31 வயதான சைட் சாதிக் விளையாட்டுப் போட்டிகளில் எப்போதும் ஆர்வம் காட்டுபவர்.

#TamilSchoolmychoice

அயர்ன்மேன் மலேசியா போட்டியில் சைட் சாதிக் பங்கு பெறுவது இதுவே முதன் முறையாகும். இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் 3.8 கிலோ மீட்டர் நீச்சல் போட்டி, 180 கிலோ மீட்டர் சைக்கிளோட்டம், 42.2 கிலோமீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகளை உள்ளடக்கியதாகும்.