Home இந்தியா ஸ்டாலின் அக்காள் கணவர் முரசொலி செல்வம் காலமானார்

ஸ்டாலின் அக்காள் கணவர் முரசொலி செல்வம் காலமானார்

248
0
SHARE
Ad

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான செல்வியின் கணவர் முரசொலி செல்வம் (கருணாநிதியின் மருமகன்) தனது 82-வது வயதில் நேற்று வியாழக்கிழமை அக்டோபர் 10-ஆம் தேதி பெங்களூரில் காலமானார். பெங்களூரில் செல்வியின் வீட்டில் இருந்து முரசொலி செல்வம் நல்லுடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடன் பிறந்த சகோதர் முரசொலி செல்வம்.

முரசொலி செல்வம் மறைவு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். “சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக – வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த அந்தக் கடைசித் தோளை – கொள்கைத் தூணை இன்று இழந்து நிற்கிறேன்” என ஸ்டாலின் தன் முகநூலில் பதிவிட்டார்.