Home நாடு காவல் துறை தடுப்புக் காவலில், மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்மணி!

காவல் துறை தடுப்புக் காவலில், மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்மணி!

358
0
SHARE
Ad

லங்காவி : கெடா மாநிலத்தின் லங்காவியில் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் இருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார்.

34 வயதான அந்த பெண்மணி டிசம்பர் 12 அன்று கைது செய்யப்பட்டதாகவும், நேற்று சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் புக்கிட் அமானின் அறிக்கை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அலோர்ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் நாளை திங்கட்கிழமை உடற்கூறு பரிசோதனை செய்யப்படுகிறது.

மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1)(a) மற்றும் பிரிவு 39B ஆகியவற்றின் கீழ் அந்தப் பெண்மணி கைது செய்யப்பட்டார்.