வாரணாசி : இந்தியாவின் தொன்மையான நகரங்களில் ஒன்று வாரணாசி என அழைக்கப்படும் காசி. தமிழர்களுக்கும் இந்த நகருக்கும் இடையில் வணிக, கலாச்சார, சமய தொடர்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன.
கடந்த காசி தமிழ்ச் சங்கமம் என்னும் கலாச்சார விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காசி தமிழ்ச் சங்கமத்தின் இரண்டாம் பதிப்பை வாரணாசியில் உள்ள நமோ காட் என்ற இடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். வேட்டி சட்டை அணிந்து அசத்தலாக வந்து இந்த நிகழ்ச்சியில் மோடி பங்கு பெற்றார். டிசம்பர் 17 முதல் 30 வரை இந்த கலாச்சார விழா நடைபெறுகிறது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:
உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், அமைச்சர்கள், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வாரணாசி நரேந்திர மோடியின் சொந்த நாடாளுமன்றத் தொகுதியுமாகும். மோடி தனது இரண்டு நாள் பயணமாக வாரணாசி தொகுதியில் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான 37 திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். கன்னியாகுமரியில் இருந்து வாரணாசி செல்லும் புதிய ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
காசி தமிழ்ச்சங்கமம் விழாவில் கலந்து கொள்ளும் சுமார் 1,400 பேர் கொண்ட தமிழ் நாட்டின் முதல் குழு, டிசம்பர் 15-ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டது.
காசி தமிழ் சங்கமத்தின் முதல் கட்டம் நவம்பர் 16 முதல் டிசம்பர் 16, 2022 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 2,500 க்கும் மேற்பட்டோர் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு 8 நாட்கள் பயணம் செய்தனர்.