இப்போது அதே வேட்டையன் என்ற பெயர் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கும் சூட்டப்பட்டிருப்பது பரபரப்பையும் அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
காவல் துறையில் என்கவுண்டர் என்னும் – ரவுடிகளைச் சுட்டுக் கொல்லும் – ஒரு கதாபாத்திரத்தை ரஜினி ஏற்றுள்ளார். சூர்யா நடித்த’ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
வேட்டையன் படத்தின் முன்னோட்டத்தையும் படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ், ரஜினி பிறந்த நாளில் வெளியிட்டுள்ளது. அந்தப் படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: