Home நாடு மூடா கட்சி, பெரிக்காத்தான் பிரச்சார ஊர்வலத்தில் இணையாது

மூடா கட்சி, பெரிக்காத்தான் பிரச்சார ஊர்வலத்தில் இணையாது

211
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரிசையாக பிகேஆர் கட்சியில் இணைவதாலும், பிரதமர் அன்வார் இப்ராகிமிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதாலும், நிலை தடுமாறி நிற்கிறது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி.

இந்நிலையில் அண்மையில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், விரைவில் தாங்கள் நாடு முழுக்க பிரச்சார ஊர்வலம் செல்ல இருப்பதாகவும் அந்தப் பிரச்சாரங்களில் சைட் சாதிக் தலைமையிலான மூடா கட்சியும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து மூடா கட்சியிலும் சலசலப்புகள் எழுந்தன. மூடா கட்சியின் உச்ச மன்றம் எடுத்த முடிவின் மூடா, பக்காத்தான், பெரிக்காத்தான் என்ற இரண்டு கூட்டணிகளிலும் இணையாது என்றும் தனித்து மூன்றாவது அணியாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மூடா கட்சியின் சார்பில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்ச மன்றத்திற்கு மட்டுமே உண்டு எனவும் மற்ற யாரும் கருத்துகள் எதையும் கூறவேண்டாம் என்றும் அந்தக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது அணியாக, மலேசிய அரசியலில் கண்காணிப்பாளராகவும் குறைகளை கண்டுபிடித்து விமர்சனம் செய்யும் பங்கையும் மூடா வழங்கி வரும் என்றும் அந்த கட்சி தெரிவித்தது.

இது குறித்து ஏற்கனவே கருத்துரைத்த மூடா தலைவர் சைட் சாதிக் திட்டமிடப்படும் பிரச்சார ஊர்வலம் பெரிக்கத்தான் கட்சியின் பிரச்சார ஊர்வலம் அல்ல மாறாக அனைத்துக் கட்சிகளின் மக்களைச் சந்திக்கும் பிரச்சாரம் என தெரிவித்திருந்தார்.