Home இந்தியா இந்தியப் பொதுத்தேர்தல்: தேதிகள் மார்ச் 16-இல் அறிவிப்பு

இந்தியப் பொதுத்தேர்தல்: தேதிகள் மார்ச் 16-இல் அறிவிப்பு

292
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியத் தேர்தல் ஆணையத்தின் காலியான 2 ஆணையர்கள் பதவிகளுக்குப் புதியவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஞானேஷ்குமார், சுக்வீர் சிங் சாந்து என இரண்டு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தியத் தேர்தல் ஆணையம் 3 ஆணையர்களைக் கொண்டதாகும். இதன் தலைவராக ராஜிவ் குமார் செயல்படுகிறார்.

புதிய இரண்டு ஆணையர்களின் நியமனத்தைத் தொடர்ந்து நாளை (மார்ச் 16) இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணியளவில் பொதுத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.