Home கலை உலகம் ஆஸ்ட்ரோவில் ‘செம்மையான சாப்பாடு’ – தாய், மகள்களை சித்திரிக்கும் முதல் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சி!

ஆஸ்ட்ரோவில் ‘செம்மையான சாப்பாடு’ – தாய், மகள்களை சித்திரிக்கும் முதல் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சி!

169
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணும் ‘செம்மையான சாப்பாடு’ எனும் தாய் மற்றும் மகள்களைத் தொகுப்பாளர்களாகச் சித்திரிக்கும் முதல் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சியைக் கண்டு மகிழுங்கள்

தாய் மற்றும் மகள்களைத் தொகுப்பாளர்களாகவும் சமையல்காரர்களாகவும் சித்திரிக்கும் ‘செம்மையான சாப்பாடு’ எனும் முதல் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.

பிரபல உள்ளூர் திறமையான சாய் கோகிலா தனது மகள்களான நவினியா முரளி மற்றும் லிஷாலினி முரளி ஆகியோருடன் இரட்டை மகள்களான ஜஸ்விந்த் முரளி மற்றும் ரோஸ்விந்த் முரளி ஆகியோருடன் இணைந்து சமைக்கும் பல்வேறு சுவையான மற்றும் தனித்துவமானப் பாரம்பரியக் கிராமத்துச் சமையல் வகைகளைக் காட்டும் இந்தச் சமையல் நிகழ்ச்சி மார்ச் 15 இரவு 9 மணி முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

பாரம்பரியச் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் அதே வேளையில் நாவிற்கு விருந்தாகத் தயாரிக்கப்படும் பலவிதமானப் பாரம்பரியக் கிராமத்துப் பாணியிலானச் சமையல் வகைகளைக் காண்பிக்கும், பிரபல உள்ளூர் இயக்குநர் எம்.எஸ். பிரேம் நாத் இயக்கியச் செம்மையான சாப்பாடு சமையல் நிகழ்ச்சி, ஒரு அத்தியாயத்தைக் கூடத் தவறவிட விரும்பாத இரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை.

#TamilSchoolmychoice

‘பசங்க’, ​​‘ஒரு கதை சொல்லட்டா சார்’, ஆஸ்ட்ரோ செய்திகள், தமிழன் லயன் டான்சர்ஸ் மற்றும் பலவற்றின் உள்ளூர் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் குழு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு விருந்தோம்பல் வழங்கப்படும் முதல் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சி என்ற பெருமையை அடையும் இந்தத் தனித்துவமான நிகழ்ச்சி மனிஷா தங்கவேலு, சுகந்தி மற்றும் பவித்ரா போன்றப் புதுமுகத் தொகுப்பாளர்களைக் கலைத்துறைக்கு அறிமுகப்படுத்துவதின் வழி உள்ளூர் திறமையாளர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதோடு கனவுகளை மெய்ப்பிக்க மதிப்புமிக்கத் தளத்தை வழங்கும் ஆஸ்ட்ரோவின் தொடர்ச்சியான முயற்சியை உறுதிப்படுத்துகிறது.

தயிர் சாதம், பட்டர் சப்பாத்தி, புதினா பட்டர் சப்பாத்தி, பலாப்பழம் குழம்பு, லெமாங், முருங்கைக்காயுடன் கோழி ரெண்டாங், சொரக்காய் ஆட்டிறைச்சி, மாங்காய் சாதம், கருவாட்டுக் குழம்பு, கடலைக் குழம்புடன் புட்டு, பன்னீர் பட்டர் மசாலா, காளான் மசாலா மற்றும் பலவிதமான சுவையானச் சமையல்களை இந்தச் சமையல் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியை ஃபெர்ன்லீஃப் நிதி வழங்கி ஆதரிக்கின்றனர்.

பல்வேறு பாரம்பரியச் சமையல் வகைகளை அறிந்துக் கொள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.