Home கலை உலகம் கமல் – நக்மா சந்திப்பு: காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பா?

கமல் – நக்மா சந்திப்பு: காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பா?

1098
0
SHARE
Ad

Kamal-Nagmaசென்னை – அண்மைய காலமாக நடிகர் கமல்ஹாசன், அரசியல் குறித்து கடுமையான விமர்சனங்களை தனது டுவிட்டர் மூலமாகப் பதிவு செய்து வருகின்றார்.

அதேவேளையில், தான் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், அவ்வப்போது அரசியல் குறித்து மறைமுகமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றார்.

இந்நிலையில், நடிகையும், இந்திய காங்கிரஸ் மகளிர் பிரிவுச் செயலாளருமான நக்மா, சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் அவரைச் சந்தித்துப் பேசினார்.

#TamilSchoolmychoice

இச்சந்திப்பு அரசியல் ரீதியிலானது அல்ல. நட்பு ரீதியான சந்திப்பு என்று நக்மா தெரிவித்தாலும் கூட, இச்சந்திப்பில் கமலை காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என பேச்சுகள் நிலவி வருகின்றன.