Home நாடு பொதுப்போக்குவரத்து நிறுவனத் தலைவராக காலிட் நியமனம்!

பொதுப்போக்குவரத்து நிறுவனத் தலைவராக காலிட் நியமனம்!

1186
0
SHARE
Ad

KhalidAbuBakarகோலாலம்பூர் – தேசியக் காவல்படைத் தலைவர் பதவியிலிருந்து நேற்று திங்கட்கிழமை ஓய்வு பெற்ற டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர், பிராசரனா மலேசியா என்ற பொதுப்போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

அனைத்துலக அளவில், தீவிரவாதம், ஆள்கடத்தல் ஆகிய விவகாரங்களுக்கு எதிராகப் போராடும் அமைப்புகளுடன் உறவை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பு வழங்கவும் சிறப்பு தூதராக காலிட் செயல்படுவார் என நஜிப் அறிவித்தார்.

“தேசியக் காவல்படைத் தலைவராக இருந்த வரையில், குற்றங்களைக் கண்டறிவதில், டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரின் சிறந்த அனுபவம் மற்றும் அனைத்துலக அளவிலான அமைப்புகளுடன் இருக்கும் நட்புறவு ஆகியவற்றின் அடிப்படையில், இந்தப் பதவியில் அவர் நியமனம் செய்யப்படுகின்றார்” என நஜிப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

‘பிராசரனா மலேசியா’ என்ற அந்த பொதுப்போக்குவரத்து நிறுவனத்தின் உட்கட்டமைப்புப் பிரிவில் இனி செயல்படவிருக்கும் காலிட், மலேசியாவில் உலகத் தரம் வாய்ந்த பொதுப்போக்குவரத்தை உருவாக்க சேவையாற்றுவார் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.