Home Featured தமிழ் நாடு “எத்தனை வருஷம் இதையே சொல்லிக் கொண்டிருப்பார்” – ரஜினி குறித்து நக்மா கருத்து!

“எத்தனை வருஷம் இதையே சொல்லிக் கொண்டிருப்பார்” – ரஜினி குறித்து நக்மா கருத்து!

869
0
SHARE
Ad

Rajininagmaசென்னை – நேற்று சென்னையில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவது ஆண்டவனின் கையில் தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், சில அரசியல்வாதிகள் தனது பெயரைச் சொல்லி, தான் இன்னாருக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி பணம் பார்ப்பதாகவும் ரஜினி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடிகையும், அரசியல்வாதியுமான நக்மா, சென்னையில் ரஜினியைச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

இச்சந்திப்பு அரசியல் நிமித்தமானது கிடையாது என்று ஏற்கனவே நக்மா அறிவிந்திருந்தாலும் கூட, நேற்றைய ரஜினியின் கருத்தை சுட்டிக் காட்டி நக்மாவிடம் கேள்வி எழுப்பியது அந்தத் தனியார் தொலைக்காட்சி.

தனியார் தொலைக்காட்சியின் நேரலையில் பேசிய நக்மா, “நான் ரஜினியை நட்பு ரீதியாகத் தான் சந்தித்தேன். அவர் அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் கையில் தான் இருக்கிறது. இன்னும் எத்தனை வருஷம் இதையே சொல்லிக் கொண்டிருப்பார். இருந்தாலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லா தான் இருக்கும்” என்று தெரிவித்தார்.