Home Featured இந்தியா சிறை நீடிப்பு: தினகரனை மீண்டும் குடையப் போகும் டெல்லி போலீஸ்!

சிறை நீடிப்பு: தினகரனை மீண்டும் குடையப் போகும் டெல்லி போலீஸ்!

887
0
SHARE
Ad

TTV Thinakaranசென்னை – இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டிடிவி தினகரனுக்கு, வரும் மே 29-ம் தேதி வரையில் காவல் நீடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன், டில்லி திகார் சிறையில், கடந்த மே1-ம் தேதி அடைக்கப்பட்டார்.

தினகரனுடன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரா, ஹவாலா முகவர் நரேஷ் ஜெயின் என்ற நாது சிங் ஆகியோரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.