Home இந்தியா சுப்ரதா ராயின் பிணை மனு தள்ளுபடி!

சுப்ரதா ராயின் பிணை மனு தள்ளுபடி!

648
0
SHARE
Ad

subodh_royடெல்லி, ஏப்ரல் 4 – சகாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராயின் பிணை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மோசடி வழக்கில் சிக்கியுள்ள சகாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராயை பிணையில் விட,

ரூ.10,000 கோடியை பிணைத் தொகையாக செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த தொகை முழுவதுமாக ஒரே சமயத்தில் செலுத்த முடியாது என்று கூறிய சகாரா நிறுவனம்,

முதல் தவணையாக ரூ.2,500 கோடியை செலுத்துவதாக தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சுப்ரதா ராயின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.